அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த போது விபத்து.. பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கார்.. 3 பேர் உடல்நசுங்கி பலி!

By vinoth kumar  |  First Published Apr 12, 2024, 1:08 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் 5 பேர் வந்துக்கொண்டிருந்தனர். காரை  சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் தினேஷ் (29) ஓட்டினார். 


திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்நாடக காவல்துறை  உயர் அதிகாரி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக  பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பட்டாலியன் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் பணிக்காக சென்னைக்கு வந்த கர்நாடகா சிறப்பு படை காவலர்கள் ஹேமந்த்குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல் ஆகியோர் வந்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழை வச்சு செய்யப்போகுதாம்.! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!

இவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் 5 பேர் வந்துக்கொண்டிருந்தனர். காரை  சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் தினேஷ் (29) ஓட்டினார். கார் கீழ்பென்னாத்தூர் பைபாஸ் சாலை வழியாக வந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில்  கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்டு பணியில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க:  காங்கிரஸ் ஆட்சி வந்தால் மேகதாது அணை! சித்தராமையா சொல்லி 3 நாள் ஆச்சு! கண்டனம் தெரிவிக்காத முதல்வர்! அன்புமணி!

இந்த விபத்தில் உதவி கமாண்டன்ட் பிரபாகரா, ஓட்டுநர்  தினேஷ், கன்மேன் விட்டல்(35) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஹேமந்த்குமார், ஜெயக்குமார் ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

click me!