பணியிடத்தில் மனைவிக்கு ஃபிளையிங் கிஸ்.. ஆயர்வேத மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை.. போலீசார் விசாரணை

Published : Mar 22, 2024, 02:21 PM IST
பணியிடத்தில் மனைவிக்கு ஃபிளையிங் கிஸ்.. ஆயர்வேத மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை.. போலீசார் விசாரணை

சுருக்கம்

பணியிடத்தில் மனைவிக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ஆயர்வதே மருத்துவர் ரத்தம் சொட்ட, சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவர் ஒருங்கிணைந்த ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவராக நாகை மாவட்டம் தேவூரில் கிளினிக் வைத்துள்ளார். இவரது மனைவி சுதா தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 2008 ம் ஆண்டு திருமணமாகி 13 வயதில் மகன் உள்ளான்.

இந்த நிலையில் செந்தமிழ்செல்வன் மற்றும் அவரது மனைவி சுதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. மேலும் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும்  நீதிமன்ற உத்தரவுப்படி மகனை பார்க்க மனைவி சுதா அனுமதிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தண்ணீர் கேட்ட உணவு டெலிவரி பாய்! கிச்சனுக்கு சென்ற பெண் என்ஜினீயர் அலறல்! நடந்தது என்ன?

இந்த சூழலில் சுதா சித்த மருத்துவராக பணிபுரியம் தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செந்தமிழ்செல்வன் சென்ற போது அவரை சுதா மற்றும் அங்குள்ள பணியாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலை, காலில் பலத்த காயமடைந்த அவர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் கூறிய போது தனது மாமனார் தன்னிடமிருந்து 200 பவுன் நகையை திருடிக் கொண்டு தனது மனைவியை தன்னிடம் சேர விடாமல் தடுத்து வருவதாகவும், இதனால் மனைவி என்னை ஆள் வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்தார்.

நடன கலைஞரை 3 நாட்கள் அடைத்து வைத்து கொடுமை படுத்திய திமுக பிரமுகர்? இளம்பெண் பரபரப்பு புகார்

மேலும் நான் மருத்துவமனைக்கு நோயாளியாக தான் சென்றதாகவும் எனக்கு சிகிச்சை அளிக்காமல் தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சித்த மருத்துவர் சுதாவிடம் கேட்ட போது தங்களுக்கு விவகாரத்து ஆகிவிட்டதாகவும்,  தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்து ஃபிளையிங் கிஸ் கொடுப்பது போன்ற தொந்தரவுகள் செய்வதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவரை பணியில் இருந்த பெண் சித்த மருத்துவர் தாக்கிய சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?