தமிழகத்தில் வெற்றி பெற்று தான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் பிரதமருக்கு இல்லை - டிடிவி தினகரன்

By Velmurugan s  |  First Published Mar 18, 2024, 3:55 PM IST

ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்பவர்கள் அனைவரும் வீழ்த்தப் படுவார்கள் என்பதற்கு உதாரணமாக பழனிசாமியின் வீழ்ச்சி இருக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசித்து விட்டு நாளை சேலத்தில் நடைபெறவுள்ள பொது கூட்டத்திற்கு இன்று செல்ல உள்ளேன். 

ஒரு சில தனி நபர்களின் சுயநலம், பதவி வெறி, பணத்திமிரினால், துரோக புத்தியினால் புரட்சித்தலைவர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அந்த மாபெரும் இயக்கம் இன்றைக்கு வீச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இரட்டை இலை என்ற மாபெரும் மக்கள் சின்னம் இருந்தும், அவர்கள் 2019 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதிலும் வெற்றி பெற முடியவில்லை. பண பலம், படை பலம் இருந்தும் தோல்வியை சந்தித்த அவர்கள் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியை தழுவினர்.

Latest Videos

undefined

ஆவின் பாலில் நீச்சல் அடித்த புழுக்கள்; நீலகிரி தேனீர் கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

பழனிசாமி கம்பெனி செய்த ஊழல் முறைகேடுகளால், சுயநல நிர்வாகத்தால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஆட்சி பொறுப்பில் இருந்து  அகற்றினர். பழனிசாமியின் சுயநலத்திற்கும், துரோக சிந்தனைக்கும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப விரைவில் பழனிச்சாமிக்கு மக்கள் மிக விரைவில் உறுதியாக தண்டனை அளிப்பார்கள். அசுரனின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்த பிறகு அம்மாவின் இயக்கம் மீண்டும் வலுப்பெறும். உண்மையான தொண்டர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நானும், ஓபிஎஸ்சும் இணைந்துள்ளோம்.

பழனிச்சாமி அணியில் இருக்கும்  90% பேருக்கு பதவி வர பக்கபலமாக இருந்தவன் நான். பதவிக்காக அலைபவர்கள் நானும், ஓபிஎஸ்சும் இல்லை. துரோகம் வீழ்த்தப்படும். ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்பவர்கள் எல்லாம் வீழ்த்தப் படுவார்கள் என்பதற்கு உதாரணமாக பழனிசாமியின் வீழ்ச்சி இருக்கும். தமிழ்நாட்டில் வெற்றி பெற்று தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம்  பிரதமருக்கு இல்லை. 

கோவை பாஜகவின் கோட்டை; கோவையில் பாஜக வெற்றி பெறுவது உறுதி மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

 ஆர் கே நகர் தொகுதியில் நோட்டா பெற்ற வாக்குகளை கூட பெறவில்லை என்று பாஜகவை பார்த்து எதார்த்தத்தை தான் கூறியிருந்தேன். ஆனால் சட்டமன்றத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட வெற்றி பெறவில்லை. பாஜக நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது. தொண்டர்களின் விருப்பத்தோடு தான் பாஜகவிற்கு சென்றுள்ளோம். எந்த  வித நிபந்தனையும், நிர்பந்தமும் எங்களுக்கு இல்லை.

வெளிநாடுகளில் இருந்து ஊடுருவும் போதை பொருட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. தமிழகத்தில் அதிக அளவு உள்ளது. சிஏஏ குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது எவருடைய குடியுரிமையையும் பறிப்பது இல்லை. குடியுரிமை கொடுக்கும் சட்டம். சிஏஏ திருத்தச் சட்டம் கொண்டு வருவதால் எந்தவித தவறும் இல்லை என்றார்.

click me!