பிரதமர் மோடிக்கு திமுகவையும், என்னையும் கண்டால் ரொம்ப ரொம்ப பயம் என மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்தில் ஆ.ராசா பேச்சு.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நகர பகுதியில் நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பிரசார வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபடி பரப்புரை மேற்கொண்டார். அண்ணாஜிராவ் சாலை, எம்.எஸ்.ஆர் புரம் பகுதியில் கூடியிருந்த மக்களிடையே ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், இந்துக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன உரிமை, பிரதமருக்கு, முதலமைச்சருக்கு, உச்ச நீதிமன்றத்திற்கு என ஒவ்வொருவருக்கும் என்ன உரிமை என அரசியல் சாசனம் வரையறுக்கின்றது. நான் மீண்டும் வெற்றி பெற்றால் இந்த அரசியல் சாசனத்தை திருத்துவேன் என்கிறார் பிரதமர் மோடி.
பொள்ளாச்சி அருகே காட்டெருமையை வேட்டையாட சீறிப்பாய்ந்த புலி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்திய அரசியல் சாசனத்தை இல்லாமல் செய்து விடுவார்கள். இப்போதே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட டெல்லி முதலமைச்சரையும், ஜார்கண்ட் முதலமைச்சரையும் சிறையில் அடைத்துள்ளனர். அதனால் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என ஸ்டாலின் அழைக்கறார். மோடிக்கு திமுகவை நினைத்தால் பயம். குறிப்பாக என்னை கண்டால் ரொம்ப ரொம்ப பயம். ஏனென்றால் நான் நாடாளுமன்றத்தில் அவர்களை எதிர்த்து நேருக்கு நேராக கேள்வி கேட்கிறேன்.
பிரசாரத்தின் போது துறவியை பார்த்ததும் எல்.முருகன் செய்த நெகிழ்ச்சி செயல்; வீடியோ வைரல்
அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்பட்டால் அதிபர் ஆட்சி முறை மட்டுமே இருக்கும். தேர்தல் என்பது ஒரே முறை தான். எதிர்த்து கேள்வி கேட்டால் சிறையில் அடைக்கப்படும் சூழல் உருவாகும். தற்பொழுது ஜனநாயகத்தில் உள்ள பல பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இனி ஒரு முறை மீண்டும் மத்தியில் அட்சி செய்யும் அரசு தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனநாயகமே இருக்காது” என பேசினார்.