பிரசாரத்தின் போது துறவியை பார்த்ததும் எல்.முருகன் செய்த நெகிழ்ச்சி செயல்; வீடியோ வைரல்

By Velmurugan s  |  First Published Apr 12, 2024, 12:36 PM IST

மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்திற்கு சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துறவி ஒருவரை பார்த்ததும், அவரிடம் ஓடிச்சென்று ஆசி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான எல் முருகனின் முகாம் அலுவலகம் செயல்படுகிறது. தேர்தலை முன்னிட்டு இணை அமைச்சர் எல்.முருகன் இங்கு தங்கி இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வழியாக காரில் சென்றார்.

பொள்ளாச்சி அருகே காட்டெருமையை வேட்டையாட சீறிப்பாய்ந்த புலி; இணையத்தில் வைரலாகும் வீடியோ

அப்போது அந்த வழியாக ஜெயின் பெண் துறவி ஒருவரை அவரது பெண் சீடர்கள் சக்கர நாற்காலியில் அமரவைத்து அழைத்து வந்தனர். அதனை பார்த்து உடனடியாக காரினை நிறுத்தி அவரை நோக்கி ஓடி சென்று அவரின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். ஆசி பெற்றதுடன் அவரிடம் நலம் விசாரித்த எல்.முருகன் பின்னர் அங்கிருந்து மீண்டும் பிரசாரம் செய்ய புறப்பட்டு சென்றார்.

click me!