சுற்றுலா சென்ற இடத்தில் உல்லாசம்! கர்ப்பமான 17 வயது பள்ளி மாணவி! சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த டாக்டர் கைது

By vinoth kumar  |  First Published Apr 7, 2024, 2:14 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 17 வயது பள்ளி மாணவி. இவர் பள்ளியில் சுற்றுலா சென்ற போது சக வகுப்பு மாணவருடன் தனிமையில் இருந்துள்ளார். 


17 வயது பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு செய்த நரேந்திர பாபு என்ற மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில் மெடிக்கல் ஷாப்பிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 17 வயது பள்ளி மாணவி. இவர் பள்ளியில் சுற்றுலா சென்ற போது சக வகுப்பு மாணவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால், அவர் கர்ப்பமாகியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பெற்றோர் கருக்கலைப்பு செய்ய கூடலூரை சேர்ந்த மருத்துவர் நரேந்திர பாபுவை நாடியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: எனக்கு 2 குழந்தைகள் இருக்கு! இதெல்லாம் வேண்டாம் சொன்ன மசாஜ் சென்டர் பெண்! 25 முறை கத்தியால் குத்தி கொடூர கொலை!

அவர் பரிந்துரை செய்த கருக்கலைப்பு மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பான விபரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மருத்துவத்துறை அதிகாரிகள்  மெடிக்கல் ஷாப்பை பூட்டி சீல் வைத்தனர்.

இதையும் படிங்க:  கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. நேரம் பார்த்து கணவனை போட்டு தள்ளிய 2வது மனைவி!

சட்டவிரோதமாக மருந்துகளை பரிந்துரை செய்த மருத்துவர் நரேந்திர பாபுவையும் கைது செய்தனர். மேலும், மாணவி, மாணவர் இருவரும் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!