முப்படை தளபதி விபத்தில் உயிரிழந்த போது வராத பிரதமர் பிரசாரத்திற்காக மட்டும் நீலகிரி வருகிறார் - ஆ.ராசா விமர்சன

By Velmurugan s  |  First Published Apr 3, 2024, 6:52 PM IST

முப்படைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு தேசியக்கொடி போற்றி வீரவணக்கம் செலுத்தியவர் முதலமைச்சர் என உதகையை அடுத்த கேத்தி பாலடா பகுதியில் திமுக வேட்பாளர் ஆ. ராசா பிரச்சாரத்தின் போது பேச்சு.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நான்காவது முறையாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று பல்வேறு கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் உதகையை அடுத்த கேத்தி பாலாடா பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தமிழ்நாட்டை நேசிப்பதாகவும், தமிழை நேசிப்பதாகவும் கூறுகிறார். மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் நட்டா பேசும்போது திமுகவும், ஸ்டாலினும் தமிழ்நாட்டை பிரிக்க பார்க்கிறார்கள் என்றும், தமிழ்நாடு தனியாக இருப்பதாகவும் தேசிய ஓட்டத்திற்கு வருவதில்லை என கூறினார். ஆனால் பாகிஸ்தான், இந்தியா மீது படை எடுத்த போதும், கார்கில் போரிற்காக நிதியை வழங்கியதும் கலைஞர் தான். எங்களுக்கா தேச ஒற்றுமை இல்லைய என கேள்வி எழுப்பினார்.

Tap to resize

Latest Videos

undefined

தனி்யார் தொலைக்காட்சி விவாதத்தில் வெடித்த மோதல்; குடும்ப தலைவரை வெட்டி கொன்ற மனைவி, மகன்

மேலும் பேசிய அவர் வரும் 10ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி, பாரத் மாதா கி ஜே என்றும், தமிழை நேசிப்பதாகவும், கூறிவிட்டு செல்வார். தேர்தல் நேரத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது ஏன் அவர் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை? 

மோடி, அமித்ஷா என்ற மோசமான சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - திருமாவளவன் பேச்சு

ராணுவத்திற்கு தேவையான வெடி மருந்துகளை உற்பத்தி செய்யும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு ஏன் இதுநாள் வரை பிரதமர் மோடி வருகை புரியவில்லை என்றும் அவர் பேசினார். மேலும் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்த போது ஓடோடி வந்து தேசிய கொடியை போற்றி வீரவணக்கம் செலுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று பேசினார்.

click me!