தமிழகத்திற்கான நிதியை கேட்டால் வாழைப்பழம் கதையை கூறுகிறார்கள்; நிர்மலா சீதாராமன் குறித்து ஆ.ராசா விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 3, 2024, 12:39 PM IST

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக நாடாளுமன்றத்தில் நிவாரணம் கேட்டால் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழக் கதையை மத்திய நிதியமைச்சர் சொல்வதாக உதகையை அடுத்த மஞ்சூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆ.ராசா பேச்சு.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நான்காவது முறையாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று பல்வேறு கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் உதகையை அடுத்த மஞ்சூர் பகுதிக்கு வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு படுகர் இன மக்கள் தங்களது கலாச்சார உடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வாங்கி கொடுத்த ஆ.ராசாவிற்கு நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

எந்த மூஞ்ச வச்சிகிட்டு ஓட்டு கேட்டு வரீங்க? பாமக வேட்பாளரை கதறவிட்ட சாமானியன் - தஞ்சையில் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா தொற்று நோய் மற்றும் அரசு 5 லட்சம் கோடி கடன் பெற்றிருந்த நிலையில் மழை, வெள்ளம் என பல்வேறு பாதிப்புகளுடன் முதலமைச்சராக பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குள் அனைத்தையும் சீர் செய்தவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

கோவையில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு மத்தியில் கும்மியாட்டம் ஆடி அண்ணாமலை அசத்தல்

மேலும் தமிழகத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் வெள்ள நிவாரண நிதியை வழங்க நிதியமைச்சரிடம் கேட்டபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறையாக பதில் அளிக்கவில்லை என்றார்.

click me!