உதகையில் கட்டுமான பணியின் திடீரென மண்சரிவு! மண்ணில் புதைந்த இரண்டு பேரின் நிலை என்ன? பரபரப்பு தகவல்!

By vinoth kumar  |  First Published Mar 13, 2024, 1:22 PM IST

உதகை அருகே உள்ள மரவியல் பூங்கா பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 30 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது.


உதகை மரவியல் பூங்கா அருகே கட்டுமான பணியின் போது மண் சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 2 தொழிலாளர்களில் ரிஸ்வான் (22) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உதகை அருகே உள்ள மரவியல் பூங்கா பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 30 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 30 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது திடீரென மண்சரிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டு வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (22) மற்றும் ஜாகீர் (25) ஆகியோர் மண்ணில் புதைந்தனர். இதனையறிந்த மற்ற பணியாளர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மண்ணில் புதைந்த கூலித்தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக ஈடுபட்டனர் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவில் நேரில் ஆய்வு மேற்கொணடார். உதகை நகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பணிகள நடைபெற்று வந்த நிலையில் கட்டுமான பணிக்கு முறையான அனுமதி பெறாமல் நடைபெற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மண்ணில் புதைந்த 2 நபர்களை மீட்கும் பணி தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்ணில் புதைந்த மற்றொரு உருவான ரிஸ்வானை அரை மணி நேரத்தில் மயக்க நிலையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு பணி துறையினர் மேட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஸ்வான் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!