கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப கொடுத்தாலும் மீனவர்கள் பிரச்சனை தீராது - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

By Ajmal Khan  |  First Published Apr 12, 2024, 12:46 PM IST

ஒருவேளை கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கி விட்டால் இந்தியா மீனவர்கள் அதன் எல்லையில் இருந்து ஒரு கடல் மைல் எல்லைக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க முடியாது. அதேபோல இலங்கை மீனவர்களும் ஒரு கடல் மைலுக்கு அப்பால் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க முடியாது என கடற் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


ஒரு கடல் மைல் தாண்டமுடியாது

எல்லைத்தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தொடர்ந்து தாக்கப்படும் சம்பவமும் நீடித்து வருகிறது. எனவே கச்சத்தீவை மீண்டும் இந்தியா திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்ற நிலையில், கச்சத்தீவு பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இலங்கை கடற் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,

Tap to resize

Latest Videos

வடக்கில் சீனாவை விட இந்தியாவின் உறவை விரும்பும் நிலையில் கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கினால் இந்திய  மீனவர்களின் எல்லை தாண்டிவரும் பிரச்சனை தீரப் போவதில்லை. ஒருவேளை கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கி விட்டால் இந்தியா மீனவர்கள் அதன் எல்லையில் இருந்து ஒரு கடல் மைல் எல்லைக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க முடியாது. அதேபோல இலங்கை மீனவர்களும் ஒரு கடல் மைலுக்கு அப்பால் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க முடியாது என தெரிவித்தார். 

வளமான 80 மடங்கு கடலை தாரைவார்த்துவிட்டோம்

வடக்கில் சீனாவை விட இந்தியாவின் உறவை விரும்பும் நிலையில் கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கினால் இந்திய  மீனவர்களின் எல்லை தாண்டிடும் பிரச்சனை தீரப் போவதில்லை. எனவே தற்போது கச்சத்தீவு பிரச்சனை அதுவல்ல என தெரிவித்த அவர்,  இந்திய மீனவர்கள் யாழ்குடா கடற்பரப்பில் கரைக்கு வருகை தந்து மீன் பிடிக்கிறார்கள் அதைத் தடுப்பதற்கு இது நாட்டு தலைவர்களுடனும் இராஜதந்திர ரீதியியான பேச்சுவார்த்தை  வேண்டும் என கூறினார்.  கச்சதீவு 1974 ஆம் ஆண்டு தொடக்கம் இருநாட்டு மீனவர்களும் சுதந்திரமாக மீன்பிடிக்கும் இடமாக காணப்பட்ட நிலையில் 1976 ஆம் ஆண்டு இரு நாடுகளும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தின் பிரகாரம்  இலங்கையிடமும் ஒப்படைக்கப்பட்டது. கச்சதீவை இலங்கை  பெற்றதால் கச்சதீவு போல் வளமான 80 மடங்கு கடலை இந்தியாவுக்கு தாரை வார்த்து விட்டோம் என்றார்.

தேர்தலுக்கு பிறகு பேச்சுவார்த்தை

இலங்கை இந்தியா உறவுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவு நம்பிக்கையானது. அதன் காரணமாகவே  எல்லை தாண்டும் மீனவர் பிரச்சனையையும் பேசி தீர்ப்பதற்காக புதுச்சேரி மாநில முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். அங்கு தேர்தல் இடம்பெற உள்ளதால் தற்போதைக்கு செல்வதற்கான திட்டம் இல்லையென கூறினார். விரைவில் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு புதிய அரசாங்கம் ஒன்று அமைந்ததன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக என கடற் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 
 

click me!