தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்தில் இறந்த சிறுமி - பெற்றோருடன் சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்

தனியார் நட்சித்திர ஓட்டல் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


சென்னை, மப்பேடு பகுதியில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் பிரேம் எட்வின் ராஜ், இவர், பொங்கல் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக குடும்பத்துடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது அங்குள்ள புராதன சின்னங்களை குடும்பத்துடன் சுற்றி பார்த்தனர்.

Latest Videos

இதையும் படிங்க..6 கோடி இன்சூரன்ஸ் பணம்! அரசு ஊழியரின் விபத்து நாடகம்.. துணிவுடன் தூக்கிய போலீஸ்! வேற மாறி சம்பவமா இருக்கே!

ஓரைக்கு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் ஒன்றில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். அப்போது, அவரது மகள் ஜோஸ்னா (அவருக்கு 8 வயது) திடீரென அறையின் கதவை திறந்து வெளியே சென்று, அங்குள்ள தனியார் நீச்சல் குளம் அருகே ஜாலியாக விளையாடி கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி நீச்சல் குளத்தில் தவறி விழுந்து, மூச்சு திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த  சிலர் நீச்சல் குளத்தில் குதித்து சிறுமியை மீட்டனர். பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது சிறுமி இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

click me!