சட்டமன்ற உறுப்பினர் ஈ.வே.ரா திருமகன் மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான ஈவிகேஎஸ் இளகோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஈ.வே.ரா. திருமகன் கடந்த 4ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு என்ற பெயரை அவ்வளவு எளிதா மாற்றிவிட முடியாது - ஆளுநர் தமிழிசை
இந்நிலையில், காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி 8ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 27ம் தேதி வாக்கு பதிவு நடத்தப்பட்டு மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி உப்பாறு ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு
ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியானது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதே கூட்டணி தற்போதும் தொடர்ந்து வருகிறது. அதனால், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.