ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம் செய்து சாதனை..! கெத்து காட்டும் சென்னை மெட்ரோ ரயில்

By Ajmal KhanFirst Published Jan 18, 2023, 2:55 PM IST
Highlights

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையம், ரயில்நிலையங்களுக்கு செல்ல கடந்த 13 ஆம் தேதி மட்டும் சுமார் 2.66 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

மெட்ரோ ரயில் சேவை

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் வசதிக்காக மின்சார ரயில், பேருந்து போக்குவரத்து சேவை அமைக்கப்பட்டிருந்தது. இதன் அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது, மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய புதிதில், மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையே நீடித்து வந்தது, ஆனால் தற்போது மக்கள் மெட்ரோ ரயில் சேவையை அதிகளவு பயன்படுத்த தொடங்கியுள்ளது. அந்தவகையில் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டை தமிழகம் என அழைத்தது ஏன்..?ஆளுநர் ஆ,ர்.என். ரவி திடீர் விளக்கம்

ஒரே நாளில் 2.66லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இதுநாள் வரை இல்லாத அளவு (13.01.2023) அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,66,464 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 21,731 பயணிகளும், 

ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்..!

பொதுமக்கள் பயணம் அதிகரிப்பு

கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் 14,649 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 13.607 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 12,909 பயணிகளும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ இரயில்களில் ஜனவரி 13, 2023 முதல் ஜனவரி 17,2023 வரை பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை பொறுத்தவரை, 13ஆம் தேதி 2.66 லட்சம் பேரும், 14 ஆம் தேதி 1ழ62 லட்சம் பேரும், 15ஆம் தேதி 1.08 லட்சம் பேரும், 16ஆம் தேதி 1.34 லட்சம் பேரும், 17ஆம் தேதி 1.65 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

வீரவணக்க நாள் கூட்டம்..! அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி

click me!