தூத்துக்குடி உப்பாறு ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு

By Velmurugan s  |  First Published Jan 18, 2023, 2:19 PM IST

தூத்துக்குடி மாவட்டம் உப்பாற்று ஓடையில் படகிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் ஜெனிஸ்டோவின் உடலை உயிரிழந்த நிலையில், படகு மூலம் மீனவர்கள் உதவியுடன் தெர்மல் நகர் காவல் துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம், பாத்திமா நகரைச் சேர்ந்த ஜெனிஸ்டோ. சென்னையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்கு தூத்துக்குடிக்கு வந்த ஜெஸ்ட்டோ தனது நண்பர்கள் 10 பேருடன் நேற்று இரவு சிறிய படகு மூலம் அனல் மின் நிலையம் அருகே உள்ள உப்பாற்று ஓடையில் உற்சாகமாக  இருக்க சென்றுள்ளனார்.

தமிழ்நாடு என்ற பெயரை அவ்வளவு எளிதா மாற்றிவிட முடியாது - ஆளுநர் தமிழிசை

Latest Videos

undefined

உற்சாகம் மிகுதியில் சிறிய படகில் வைத்து நடனம் ஆடியுள்ளனர். இதில் படகு தலைகிழாக கவிழ படகில் இருந்த வாலிபர் ஜெனிஸ்டோ  உள்ளிட்ட 10 பேர் உப்பாற்று ஓடையில் தவறி விழுந்துள்ளனர். ஒன்பது பேர் ஓடையில் இருந்து தப்பி வெளியே வந்த நிலையில், ஜெனிஸ்டோ மட்டும் உப்பாற்றின் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டார்.

குளித்தலை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த வீரர் பலி

இதைத்தொடர்ந்து ஜெனிஸ்டோவின்  நண்பர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இதை அடுத்து தெர்மல் நகர் காவல் துறையினர்  இன்று அதிகாலை சுமார் இரண்டு மணி நேரம் உப்பாற்று ஓடை பகுதியில் சிறிய படகில் மீனவர்களுடன் சென்று வாலிபரின் உடலை தேடினர். இதைத் தொடர்ந்து முட்புதரில் சிக்கி இருந்த ஜெனிஸ்டோவின்  உடலை மீட்ட காவல்துறையினர் கல்லூரி மாணவர் ஜெனிஸ்டோவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

click me!