உதவிக்கு ஓடோடி வந்த பெண் தலைமை காவலர்.. விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!

By vinoth kumar  |  First Published Jan 18, 2023, 2:01 PM IST

சென்னை மேற்கு  தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக ரமா பிரபா பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே சென்றுக்கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. 


சென்னையில் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மேற்கு  தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக ரமா பிரபா பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே சென்றுக்கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, ரமா பிரபா தன்னுடன் உதவி காவல் ஆய்வாளராக பணி புரியும் ஷூலா ஜெபமணியை செல்போனில் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்துள்ளார். 

Latest Videos

இதனையடுத்து, ஷூலா ஜெபமணி ரமா பிரபுவை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜெபமணி வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் அசுர வேகத்தில் மோதியுள்ளது. இதில், ஷூலா ஜெபமணி தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம்  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு தலையில் 7 தையல்கள் போட்டும், மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது  பல்லாவரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சக்தியை ( 41) கைது செய்தனர். 

click me!