அப்பளம் பொறிக்க எவ்வளவு நேரம்? சூடான கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொன்ற மனைவிக்கு தண்டனை குறைப்பு.!

Published : Jan 18, 2023, 10:23 AM IST
அப்பளம் பொறிக்க எவ்வளவு நேரம்? சூடான கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொன்ற மனைவிக்கு தண்டனை குறைப்பு.!

சுருக்கம்

கிருஷ்ணகிரியை சேர்ந்த அப்துல் ரசித் என்பருவக்கும், மனைவி ஆயிஷாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு உணவின் போது கணவர் அப்துல் ரசித் மனைவியிடம் அப்பளம் பொறித்து தருமாறு கேட்டுள்ளார்.

அப்பளம் பொறித்து தருவதற்கு நேரமானதை கண்டித்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வழக்கில் மனைவிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கிருஷ்ணகிரியை சேர்ந்த அப்துல் ரசித் என்பருவக்கும், மனைவி ஆயிஷாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு உணவின் போது கணவர் அப்துல் ரசித் மனைவியிடம் அப்பளம் பொறித்து தருமாறு கேட்டுள்ளார். அப்பளம் பொறிக்க தாமதமாகவே அப்துல் ரசித் சண்டையிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி ஆயிஷா, கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். 

இதனையடுத்து, வலி தாங்க முடியாமல் அலறியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அப்துல் ரசித்தை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆயிஷாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் ஆயிஷாவுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து ஆயிஷா தரப்பில் சென்ன உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை. உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த சாட்சியின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டது என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அப்துல் ரசீத்திடம் போலீசார் வாக்குமூலம் பெறவில்லை. பிரேத பரிசோதனை தவிர வேறு எந்த மருத்துவ ஆவணங்களும் தாக்கல் செய்யவில்லை என்று கூறி ஏற்கனவே அனுபவித்த சிறை தண்டனையே போதுமானது என்று கூறி கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து தீர்ப்பளித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு