ஸ்தம்பித்தது சென்னை.. பெருங்களத்தூர் டூ செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல்.. பொதுமக்கள் அவதி.!

By vinoth kumar  |  First Published Jan 18, 2023, 9:02 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி முதல் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை கொண்டாடும் விதமாக பலரும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், பலர் கார்களில் சொந்த ஊருக்கு சென்றன. 


பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்புவதால் பெருங்களத்தூர் டூ செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி முதல் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை கொண்டாடும் விதமாக பலரும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், பலர் கார்களில் சொந்த ஊருக்கு சென்றன. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல்.. சென்னையில் 12 இடங்களில் போக்குவரத்து மாற்றம்..!

undefined

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகம் திறக்கப்பட உள்ளதால்  ஏராளமானோர் சென்னை  திரும்புவதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதேபோல், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. 

இதையும் படிங்க;- பொங்கல் மது விற்பனை 400 கோடி.! தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ராமதாஸ் வேதனை

மேலும், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நெரிசலை தவிர்ப்பதற்காக சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு உதவ சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

click me!