
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி சிதம்பரனாரின் உருவப்படம் வரையப்பட்ட பலகையில், சாணியை பூசியதால் அப்பகுதியில் பரபரப்பு. வ.உ.சி பேரவை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் குவிந்துள்ளனர்.
தூத்துக்குடி உப்பாறு ஓடையில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு
தற்போது லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு முதலில் அசுத்தத்தை சுத்தம் செய்ய வேண்டும், அனைவருக்கும் சுதந்திர போராட்ட வீரர் எனக் கூறி சுத்தம் செய்ய முற்பட்ட போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுத்தம் செய்யக் கூடாது யார் சாணியை பூசினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகு சுத்தம் செய்ய வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கரூரிலிருந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.