கரூரில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 158 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 33 கோடியே 11 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் 1000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதல்வரால் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! அருகருகே அமர்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ்..! என்ன பேசிக்கொண்டார்கள் என தெரியுமா.?
undefined
கரூர் மாவட்டத்தில் தகுதியுள்ள 3,31,158 குடும்ப அட்டைதாரர்களுக்கு 384 முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 219 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு 33 கோடியே 11 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெற்கு காந்திகிராமத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையில் தகுதியுள்ள 1476 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தார்.