கரூரில் சாயப்பட்டறை கழிவுகளால் நுரை வழிந்தோடும் பாசன வாய்க்கால்கள்; விவசாயிகள் வேதனை

By Velmurugan s  |  First Published Jan 7, 2023, 9:30 AM IST

கரூர் அருகே சாயப்பட்டறை கழிவுகள் இரவு நேரங்களில் பாசன வாய்க்காலில் கலக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் விவசாயிகள் அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கரூர் மாவட்டம் சுக்காலியூரை அடுத்த செட்டிபாளையம் கிராமத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணைப் பகுதியில் இருந்து பிரியும் திருமாநிலையூர் ராஜவாய்க்கால், அப்பிப்பாளையம், சுக்காலியூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம், சணப்பிரட்டி, புலியூர், கட்டளை வழியாக மணவாசி வரை செல்கிறது. 

சொத்து குவிப்பு வழக்கு.. திமுக அமைச்சரின் பதவி பறிபோகுமா? இன்று வெளியாகிறது தீர்ப்பு?

Tap to resize

Latest Videos

undefined

சுமார் 35 கி.மீ தூரம் பாயும் இந்த ராஜ வாய்க்கால் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. சுக்காலியூர், அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம், செல்லாண்டி பாளையம் கிராமங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் சாயப்பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் இரவு நேரங்களில் இந்த பாசன வாய்க்கால்களில் கழிவு நீரை திறந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை புலியூரை அடுத்த கோவில்பாளையம் கிராமத்தில் பாசன வாய்க்காலில் நுரை பொங்கிய நிலையில் அதிகாலை முதல் சென்று கொண்டுள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட விவசாயிகள் அவற்றை பார்த்து வேதனை தெரிவித்தனர். 

ராட்சசியை அறிமுகம் செய்து நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு! ஜெ.குறித்து அமைச்சர் KKSSR கடும் தாக்கு

மேலும், கடந்த 3 ஆண்டுகளாக சாயப்பட்டறை கழிவு நீர் வராததால் கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாத காலமாக சாயப்பட்டறை கழிவுநீர் பாசன வாய்க்காலில் செல்வதால் வாய்க்கால் நீரை நேரடியாக நெல் பயிருக்கு பாய்ச்சியதால் நெல் பயிர்கள் வளர்ச்சியடையாமல் காய்ந்து விடுகிறது என்றும், பாசன கிணற்றில் கலந்ததால் அந்த தண்ணீர் கெட்டுப் போய் விடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 

புலியூர், கோவில்பாளையம், சணப்பிரட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் காய்ந்து விட்டதாகவும், ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை முட்டுவழிச் செலவு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பாசன வாய்க்கால்களில் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை திறந்து விடும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!