கரூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவர் புது வீடு கட்டி வருகிறார். அதன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த கழிவுநீர் தொட்டியில் மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய தொழிலாளர்கள் இறங்கி உள்ளனர். அப்போது இருவரும் திடீரென அலறியுள்ளனர். இதை கேட்ட சக ஊழியர்களான சிவகுமார் அவர்களை காப்பாற்ற உள்ளே இறங்கியுள்ளார். இதில் மூன்று பேருக்கும் விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவறான சிகிச்சை சிறுமி உயிரிழந்த விவகாரம்! இப்போ ரத்தம் கொதிக்கவில்லையா? ஸ்டாலினிடம் நாராயணன் திருப்பதி கேள்வி!
இதன் காரணமாக மூவரும் மயக்கம் அடைந்தனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மூன்று பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுக்குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் மூலமாக மருத்துவ படிப்பில் காலடி வைத்த மாற்றுத்திறனாளி சிறுமி.. நெகிழும் பெற்றோர்கள் !
இதனிடையே சம்பவம் தொடர்பாக கரூர் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விபத்து நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து பற்றிய முழு விவரங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து தகவல் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.