கரூரில் மைல் கல்லுக்கு படையலிட்ட நெடுஞ்சாலை பணியாளர்கள்

By Dinesh TG  |  First Published Oct 4, 2022, 2:40 PM IST

தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கரூர் மாவட்ட நெடுஞ்சாலைப் பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையலிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.
 


செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண்டு தோறும், அக்டோபர் மாதத்தில் கல்வி வளர்ச்சிக்காக சரஸ்வதி பூஜையும், தொழில் வளர்ச்சிக்காக ஆயுதபூஜையும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு அதி விமிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உதகையில் கோலாகலமாகத் தொடங்கிய மலர் கண்காட்சி

Latest Videos

undefined

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இருசக்கர பழுது நீக்கும் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள்,  நான்கு சக்கர வாகனங்கள்,  டீக்கடை முதல் பெரிய, பெரிய உணவகம் வரை பல்வேறு இடங்களில் இன்று ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக தேவைப்படும் பழம், வாழை இலை, வாழை மரம், பொரி, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை மற்றும் சந்தனம், விபூதி, சூடம், சாம்பிராணி, பூ, மாலை மற்றும் அழகு சாதன அலங்கார பொருட்களை நேற்று காலை முதலே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வந்தனர். 

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா; வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் நாளை விடுமுறை என்பதால் பல்வேறு அலுவலகங்கள் நேற்று மாலையே ஆயுத பூஜை விழா ஆங்காங்கே மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் கரூர் மாவட்டம், புலியூர், வையம்பட்டி மாநில தேசிய நெடுஞ்சாலை உப்பிடமங்கலம் அருகே நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஊழியர்கள் வித்தியாசமாக மைல் கல்லுக்கு (எல்லை கல்), வண்ணம் பூசி, வாழைமரம் கட்டி, மாலைகள் அணிவித்து, சந்தனப் பொட்டிட்டு, பொரிகடலை, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, சூடம், பத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை வாழையிலையில் படையலிட்டு, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகளையும் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். 

click me!