சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளரை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
சேலம், கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் சூர்யாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த குட்டியப்பன் என்பவருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராரில் குட்டியப்பனை சூர்யா கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயத்துடன் குட்டியப்பன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
undefined
இதனை அறிந்த குட்டியப்பனின் சகோதரர்கள் டெனிபா, சிலம்பரசன், விக்கி திருநாவுக்கரசு, இவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்யும் நோக்கத்திற்காக சூர்யாவின் வீட்டிற்கு எட்டு பேர் வந்துள்ளனர். அப்பொழுது சூர்யா வீட்டில் இல்லாததால் சூர்யாவின் தந்தை துப்புரவு பணியாளர் விஜயகுமார் இடம் தகராறில் ஈடுபட்ட குட்டியப்பன் சகோதரர்கள் மற்றும் அவரது நண்பர்கள் எட்டு பேரும் துப்புரவு பணியாளர் விஜயகுமாரை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுகுறித்து சேலம் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கு சேலம் மூன்றாவது கூடுதல் அமர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாநகராட்சி துப்புரவு பணியாளரை கொலை செய்த கிச்சிப்பாளையம் பாளையம் பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். தண்டனை பெற்ற எட்டு பேரும் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்ககோரி ஆடைகளை அவிழ்த்துபோட்டு திருநங்கைகள் அட்டூழியம்
முன்னதாக நீதிமன்றத்தில் இருந்து காவல் துறை வாகனத்தில் ஏற்றுவதற்காக அழைத்து வரப்பட்ட 8 பேரும் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் பேசிவிட்டு வாகனத்தில் ஏறினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட உதவி கமிஷனர் கைதிகளை விரைவாக வாகனத்தில் ஏறுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ரௌடி ஒருவர் மேல கை வைக்கிற வேலை வச்சிக்காத. அப்பறம் அவ்ளோ தான் என்று மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.