8 மாவட்டங்களை இன்று வச்சு செய்யுமாம் கனமழை…! வானிலை மையத்தின் வார்னிங்…

Published : Sep 20, 2021, 06:43 AM IST
8 மாவட்டங்களை இன்று வச்சு செய்யுமாம் கனமழை…! வானிலை மையத்தின் வார்னிங்…

சுருக்கம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக  வாணியம்பாடிடியலும, கலசப்பாக்கத்திலும் அதிக மழை பதிவானது.

இந் நிலையில் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளது.

இதே போல நாளையும், வரும் 22ம் தேதியும் வடமாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!