7 ஐஏஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்!

Published : Aug 28, 2025, 09:48 PM IST
tamilnadu secretariat

சுருக்கம்

தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Tamil Nadu Govt Transfers 7 IAS Officers: தமிழ்நாடு அரசு நிர்வாக காரணங்களுக்காகவும், ஆட்சிப் பணிகளின் செயல்திறனை மேம்படுத்தவும் அவ்வப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. கடந்த சில மாதங்களில், பல கட்டங்களாக ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று 7 ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

அதாவது அரசு சிறப்பு செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையில் பணியாற்றிய சதிஷ் சந்திரா சவான், அரசு செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசு கூடுதல் செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய பதவியில் இருந்த கே.கோபாலகிருஷ்ணன் அரசு கூடுதல் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு (சதிஷ் சந்திரா சவானுக்கு பதிலாக) மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

அரசு கூடுதல் செயலாளர், உள், மனிதவள மற்றும் ஆயுதப்படைத் துறையில் இருந்த பி.ஸ்ரீ வெங்கட பிரியா, செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய பணிக்கு (கே.கோபாலகிருஷ்ணனுக்கு பதிலாக) மாற்றம் செய்யபப்ட்டுள்ளார். வரூண்யா அபி கூடுதல் இயக்குநர், சமூக நல இயக்குநராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்வேதா சுமன் செயல் அலுவலர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு (TIDCO) மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மாற்றம்

இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த பா.மகேந்தர் லால் அரசு துணை செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுள்ளார். எஸ்.பிரியங்கா தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக (பா.மகேந்தர் லாலுக்கு பதிலாக) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அடிக்கடி ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாறுதல்

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஜூலை மாதத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இப்போது 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்