இன்னிக்கு செவ்வாய்கிழமை… 6 மாவட்டங்களில்… அட்ராசக்க மழைதான்…

Published : Sep 21, 2021, 07:50 AM IST
இன்னிக்கு செவ்வாய்கிழமை… 6 மாவட்டங்களில்… அட்ராசக்க மழைதான்…

சுருக்கம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கோவை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக மழை கொட்டி வருகிறது. வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

இந் நிலையில் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், வெப்பச்சலனத்தாலும் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தவிர உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று மட்டுமல்லாது நாளையும் 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறி இருக்கிறது.

இதனிடையே விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டியிருக்கிறது. பலத்த மழை காரணமாக சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழையின் எதிரொலியாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல காட்சி அளித்தது.

PREV
click me!

Recommended Stories

கறுப்பர் கூட்டங்களை தொண்டர்களாக வைத்திருக்கும் திமுக.. நீதித்துறையை மிரட்ட முயற்சி.. நயினார் விமர்சனம்
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!