TamilNadu Tasmac Sale: தீபாவளி திருநாளில் டாஸ்மாக் விற்பனையை தெறிக்க விட்ட மதுப் பிரியர்கள்..!

By Ajmal KhanFirst Published Oct 24, 2022, 2:55 PM IST
Highlights

தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது

தீபாவளி- மது விற்பனை அமோகம்

தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவு ஈட்டித்தரும் துறையாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. அந்தளவிற்கு மது விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆவின் பால், மின் கட்டணம், பேருந்து கட்டணம் என எந்த துறையிலும் ஒரு ரூபாய் உயர்த்தினாலும் அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் களத்திலும் இறங்கி போராடுவார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களின் விலையை 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தினாலும் போரட்டம் என்ற பேச்சே எழுவதில்லை. விலை உயர்வு இருந்தாலும் மதுபானக்கடைகளில் கூட்டம் தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுவும் பண்டிகை காலங்கள் என்றால் கேட்கவா வேண்டும் பல நூறு கோடியை தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டிக் கொடுத்து உதவி வருகிறது டாஸ்மாக்.

வலுவடையும் சிட்ராங் புயல்.. மேற்கு வங்கம், ஒடிசாவில் கனமழை எச்சரிக்கை..! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை?

இரண்டே நாளில் ரூ.464 கோடி

அந்தவகையில், கடந்தாண்டு தீபாவளியை பண்டிகையையொட்டி நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய தினமான 23-ம் தேதி சென்னை மண்டலத்தில் -ரூ. 51.52 கோடியும், திருச்சி மண்டலத்தில்  - ரூ. 50.66 கோடியும் விற்பனையாகியுள்ளது.  சேலம் மண்டலத்தில் ரூ. 52.36 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ. 55.78 கோடியும் கோவை-ரூ. 48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. எனவே கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்(TASMAC) கடைகளில் 464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இந்தநிலையில் இன்றைய தீபாவளி பண்டிகையையொட்டி மதுபான விற்பனை 250 கோடிக்கு மேல் தாண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

கோவையில் சிலிண்டர் வெடி விபத்து..! என்.ஐ.ஏக்கு மாற்ற முடிவு..? 2 பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை..?
 

click me!