கடலில் குளித்த போது நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்த பரிதாபம்!

Published : Dec 19, 2018, 04:42 PM IST
கடலில் குளித்த போது நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்த பரிதாபம்!

சுருக்கம்

பூம்புகாரில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பூம்புகாரில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மயிலாடுதுறையில் உள்ள தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ., படிப்பவர்கள் மஞ்சு, விவேகா, முதலாம் ஆண்டு படித்துவந்தவர் சிவப்பிரியா. இவர்கள் 3 பேரும் தனது தோழிகள் உட்பட 7 பேர் இன்று காலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

அப்போது கடலில் இறங்கி 5 மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது 2 மாணவிகள் கடற்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது பெரிய அலையில் சிக்கிய 5 மாணவிகளும் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மீனவர்கள் சங்கீதா, ஹசீனா பேகம் ஆகிய இரு மாணவிகளை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஆனால் விவேகா, மஞ்சு, சிவப்பிரியா ஆகிய மூன்று மாணவிகள் மூச்சு திணறி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு