குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.... தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

By vinoth kumarFirst Published Nov 29, 2018, 1:33 PM IST
Highlights

தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்  தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவு பகுதியில் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன மழையை பொறுத்தவரை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், புதுவை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது ஒரு சில இடங்களில மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 10 செ.மீ., சீர்காழியில் 6 செ.மீ., சேத்தியாதோப்பு, மயிலாடுதுறையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  

அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பெய்திருக்கும் மழையின் அளவான 31 செ.மீ. இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 35 செ.மீ. இது இயல்பை 15 சதவீதம் குறைவாகும் என பாலசந்திரன் கூறியுள்ளார்.

click me!