பிச்சையெடுத்த காசை டெல்டா மக்களுக்கு வாரி வழங்கிய ஊனமுற்ற இளைஞர்... வலைதளங்களில் குவியும் வாழ்த்துக்கள்

By sathish k  |  First Published Nov 27, 2018, 4:45 PM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கால் ஊனமுற்ற இளைஞர் ஒருவர் உதவி செய்த  செயல்  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தனது உடல் ஊனமுற்ற நிலையில் அன்றாட வாழ்க்கைக்காக யாசகம் செய்யும் நபர் ஒருவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் சிறிய தொகை பணத்தை வழங்கும் படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இவரின் மனிதாபினம் இன்று உலகத் தமிழ் மக்களால் கொண்டாடப்படுவதுடன், ஏனயைவர்களுக்கு முன் உதாரணமாகவும் விளங்குகின்றார். 

click me!