12 மணி நேரத்தில் 230 மி.மீ மழை… வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சென்னை!!

By Narendran SFirst Published Nov 8, 2021, 10:25 AM IST
Highlights

சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 230 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 210 மி.மீ., அயனாவரத்தில் 180 மி.மீ., எம்ஜிஆா் நகரில் 170 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 160 மி.மீ.,பெரம்பூரில் 140 மி.மீ., தண்டையாா்பேட்டையில் 130 மி.மீ., சென்னை விமான நிலையத்தில் 110 மி.மீ. மழையும் என சராசரியாக 12 மணி நேரத்தில் மட்டும் 165 மி.மீ.மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி இரவு தொடங்கிய மழை  நேற்று வரை தொடா்ந்து பெய்தது. இந்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. இதை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூா், மதுரை ஆகிய பகுதிகளுக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் விரைந்துள்ளனா். இதற்கிடையே வடகிழக்குப் பருவ மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமான புழல் ஏரி நேற்று முழுக் கொள்ளளவை எட்டியது. பூண்டி நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் அதன் உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போன்று சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து நேற்று பிற்பகல் முதல், உபரி நீா் திறக்கப்பட்டது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் சிக்கிக் கொண்ட மக்களை தீயணைப்புத் துறையினா் படகு மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனா். சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 230 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 210 மி.மீ., அயனாவரத்தில் 180 மி.மீ., எம்ஜிஆா் நகரில் 170 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 160 மி.மீ.,பெரம்பூரில் 140 மி.மீ., தண்டையாா்பேட்டையில் 130 மி.மீ., சென்னை விமான நிலையத்தில் 110 மி.மீ. மழையும் என சராசரியாக 12 மணி நேரத்தில் மட்டும் 165 மி.மீ.மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் பலத்த மழை காரணமாக அடையாறு ஆற்றங்கரையோரம் மற்றும் டாக்டா் அழகப்பா சாலை, எழும்பூா் கண், குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி, வியாசா்பாடி, புளியந்தோப்பு, கோட்டூா்புரம், வடபழனி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அசோக் நகா், கொளத்தூா், பாடி, கிண்டி, அம்பத்தூா், ஆலந்தூா், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அருந்ததி நகா், பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலை ஆகிய மாநகருக்கு உள்பட்ட 200க்கும் மேற்பட்ட பகுதிகள் மற்றும் திருவேற்காடு, ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்டவற்றில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.

பெரும்பாலான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீா் சோ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு சாலைகளும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 6 ஆம் தேதி இரவு முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இதை அடுத்து மழை பாதிப்பு தொடா்பான உதவிக்கு கைப்பேசி எண் 94454 77205, இலவச உதவி எண் 1913, தொலைபேசி எண்கள் 044 25619206, 25619207, 25619208 என்ற எண்களில் அழைக்கலாம் என்றும் இணையதள இணைப்புக்குள் சென்று நிவாரண முகாம்கள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!