பஞ்சாப் பதிண்டா துப்பாக்கி சூடு.! தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் பலி- சோகத்தில் உறவினர்கள்

By Ajmal Khan  |  First Published Apr 13, 2023, 9:03 AM IST

பஞ்சாப் ராணுவ முகாமில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு ராணுவ வீரர்கள் தமிழகத்தில் தேனி மற்றும் சேலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


ராணுவ முகாமில் தாக்குதல்

பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமுக்குள் நேற்று அதிகாலை தூப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதனால் அலர்ட் ஆன ராணுவ வீரர்கள் ஆயுதங்களோடு துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். தீவிரவாதிகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்று பார்த்த போது குண்டு பாய்ந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது.

Tap to resize

Latest Videos

பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்றது செல்லுமா.? 10 நாட்களுக்குள் முடிவு சொல்லுங்க- நீதிமன்றம் அதிரடி

தாக்குதல் நடத்தியது யார்.?

இதனையடுத்து அந்த ராணுவ முகாம் முழுவதும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் என முதலில் தகவல் வெளியான நிலையில் இதனை ராணுவ அதிகாரிகள் மறுத்துள்ளனர். வெளியில் இருந்து உள்ளே வந்து தாக்குதல் நடத்தப்படவில்லையென தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முகாமில் இருந்த ஒரு 'இன்சாஸ்' துப்பாக்கியும், 28 ரவுண்டு தோட்டாக்களும்காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த தேடுதல் வேட்டையின்போது, காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ராணுவ வீரர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.  இருந்த போதும் இந்த தகவல் உறுதிசெய்யப்படவில்லை.

தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் பலி

அதே நேரத்தில் துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த கமலேஷ், யோகேஷ்குமார் குண்டுகள் துளைத்து உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கமலேஷ் மேட்டூர் அருகே வனவாசி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் என்று ராணுவம் சார்பாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. மற்றொரு வீரர்  ஒருவர் தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த யோகேஷ் (24)என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியை விமர்சித்து புகைப்படம் வெளியிட்ட பாஜக மாநில நிர்வாகி..! அதிரடியாக கைது செய்த போலீஸ்

click me!