தயாரிப்பாளர்களின் வாழ்வை ஏற்றம் காண வைத்த முதல்வரின் அறிவிப்பு… நன்றி தெரிவித்து பிலிம்சேம்பர் அறிக்கை!!

By Narendran S  |  First Published Apr 12, 2023, 10:23 PM IST

நிலுவையில் உள்ள திரைப்படங்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நன்றி தெரிவித்துள்ளது. 


நிலுவையில் உள்ள திரைப்படங்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நன்றி தெரிவித்துள்ளது. இதுக்குறித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளை உள்ளடக்கிய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்றழைக்கப்படும் பிலிம்சேம்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று 2015ஆம் ஆண்டு முதல் ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள 2022 திரைப்படங்களுக்கு ரூபாய் ஏழு லட்சம் மானியம் வழங்கப்படும்.

இதையும் படிங்க: மோசடி பத்திரப்பதிவு.. வசமாக சிக்கும் நயினார் நாகேந்திரன் மகன் - அறப்போர் இயக்கம் வைத்த ஆப்பு

Tap to resize

Latest Videos

மேலும் ஒன்றரை கோடி ரூபாயில் திரைப்பட நகரம் சீர்படுத்தப்படும் என்று அறிவித்து தயாரிப்பாளர்களின் வாழ்வை ஏற்றம் காண அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு… உயிரிழந்த 4 வீரர்களில் ஒருவர் தமிழர்!!

click me!