பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு… உயிரிழந்த 4 வீரர்களில் ஒருவர் தமிழர்!!

By Narendran S  |  First Published Apr 12, 2023, 10:08 PM IST

பஞ்சாப் ராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் தேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. 


பஞ்சாப் ராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவர் தேனி மாவட்டத்தைச் தேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. அதை தொடர்ந்து அங்கு 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

இதையும் படிங்க: பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு! - சக ராணுவ வீரர் கைது!

Tap to resize

Latest Videos

இதை அடுத்து சம்பவம் நிகழ்ந்த பதிண்டா ராணுவ முகாம், மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் சூடு பிடித்து இருக்கும் நந்தினி vs அமுல்; என்ன காரணம்?

ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகேஷ், காலையில் மாட்டிற்கு தீவனம் வைப்பது தோட்ட வேலை செய்வது என அனைத்து பணிகளையும் முடித்து அதன் பிறகு, ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை செய்து வந்துள்ளார். தனது 19 ஆவது வயதில் ராணுவத்தில் சேர்ந்த அவர் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!