ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மீது அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள புகார் விவரம் வருமாறு, பத்திரப்பதிவு துறையில் நில மாபியா, நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆர்காட் ரோடு கிட்டத்தட்ட ரூ. 100 கோடி சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு அனுப்பி உள்ளோம்.
மதுரை என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முக்கிய இடங்களில் ஒன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். சொக்கிகுளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தில் சுமார் 1. 8ஏக்கர் நிலத்தை அபகரிக்க மோசடி பத்திரபதிவுகளில் ஈடுபடுகின்றார் இளையராஜா என்னும் நபர். 10 நபர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை தங்களுடைய நிலம் என்றும் இந்த நிலத்தை விற்கவும், விற்கும் பணத்தை பெற்று கொள்ளவும் பொது அதிகார பத்திரத்தை இளையராஜா மற்றும் அனிஷ் என்பவர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்கின்றனர்.
இதையும் படிங்க..சத்தமே இல்லாமல் அப்டேட்டை கொடுத்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு.. அடேங்கப்பா இப்படியொரு அப்டேட்டா
மதுரை சொக்கிகுளத்தில் உள்ள இந்த நிலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திருநெல்வேலி முரப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் 02/07/2021 அன்று பொது அதிகார பத்திர பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர் அனந்தராமன். மேலும் அதே ஜூலை மாதம் இந்த கோவில் நிலத்தை குடும்ப செலவுக்காக இளையராஜா மற்றும் அனிஷ் சேர்ந்து அடகு வைப்பதாக பழனியில் உள்ள வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 19/07/2021 அன்று பதிவு செய்கிறார்கள்.
இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர் பிரஷாந்த் சந்தான கருப்பன். இதில் இவர்கள் யாரிடம் அடகு வைக்கிறார்கள் என்று பார்த்தல் , இளையராஜா குடும்ப செலவுக்காக அவருடைய மனைவி கவிதாவிடமே 15 லட்சம் ரூபாய்க்கு அடகு வைப்பதாக பத்திரப்பதிவு செய்கிறார் மற்றும் அனிஷ் அவருடைய தந்தை பிரகாசிடமே அடகு வைப்பதாக பதிவு செய்கிறார்கள். இதெல்லாம் மோசடி பத்திரபதிவு என்று மாவட்ட தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு. IG பத்திரபதிவு 29/06/2022 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார்.
அதில் தெளிவாக ஏன் இந்த பத்திரப்பதிவு மோசடி பதிவு என்று குறிப்பிடுகிறார். நிலத்தை பதிவு செய்யும் முன்னர் முதலாவதாக இந்த நிலம் அரசு நிலமா, நீதிமன்ற தடை உள்ளதா அல்லது வக்ப் போர்டு நிலமா அல்லது கோவில் நிலமா என்று பார்க்க வேண்டும். ஆனால் அதை சரிபார்க்கபடவில்லை. இரண்டாவது பத்திரப்பதிவு சட்டத்தின் விதி 28 மீறப்பட்டு உள்ளது என்று குறிப்பிடுகிறார். இந்த விதிமீறலை வைத்து தான் பத்திரப்பதிவு துறையில் பல மோசடிகள் செய்யப்படுகிறது.
விதிபிரிவு28 இன் படி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நிலத்தை வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது. மேலும் ஒருவருடைய நிலம் இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தால் அதனை ஏதேனும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் இந்த இரண்டு நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே முக்கிய விதி. ஆனால் மேலே பதியப்பட்ட இரண்டு நிலங்களிலும் அப்பட்டமாக இந்த விதிமீறல் செய்யப்பட்டு உள்ளது இங்கு தெளிவாகிறது.
இதையும் படிங்க..உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு
இவ்வாறு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை மோசடியாக பதிவு செய்தபின் இளையராஜா மேலும் ஒரு மோசடி பத்திர பதிவை பெரிய அளவில் செய்ய களமிறங்குகிறார். ஆற்காடு சாலையில் உள்ள 1. 3 ஏக்கர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிய திட்டமிடுகிறார்கள். விருகம்பாக்கத்தில் உள்ள 1. 3 ஏக்கர் நிலம் பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர்.
2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்பவர் பெயரில் பட்டா உள்ளது என்றும் அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார். இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகபிரிவினை பத்திரத்தை பதிவு செய்கிறார்கள். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா city civil நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இன்றைய தேதி வரை இந்த வழக்கு நடந்து கொண்டு உள்ளது.
IG பத்திரபதிவு ஜூன் 2022 அன்று மேற்கண்ட சுற்றறிக்கையை வெளியிட்ட அடுத்த மாதமே, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1. 3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை பதிவு செய்கிறார்கள்.
வேறொருவர் அதாவது வசந்தா மற்றும் சுந்தர மகாகிங்கம் பெயரில் உள்ள நிலத்தை ஒப்பந்தம் போட இளையராஜா வந்த பொழுதே அவர் பெயர் பட்டாவில் இல்லை மற்றும் முந்தைய பதிரப்பதிவுகளில் அவர் பெயர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். மேலும் பிரிவு 28 ஐ மீறி சென்னை நிலத்தை திருநெல்வேலியில் பதிய முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.
ஆனால் சார்பதிவாளர் சரவணமாரியப்பன் ஜூலை 2022 இல் பத்திரப்பதிவு செய்கிறார். சென்னை மெட்ரோ ரயில் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்றும் முன்பணமாக 2. 5 கோடி கொடுத்துள்ளதாகவும் அதில் 50 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?