டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு- அதிரடி அறிவிப்பு வெளியிட்ட செந்தில் பாலாஜி

By Ajmal Khan  |  First Published Apr 13, 2023, 8:17 AM IST

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு  உள்ளிட்ட 9 அறிவிப்புகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார்.
 


96 கடைகள் மூடல்

தமிழக சட்டப்பேரவையில் மின் துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து விவாதங்களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும்,  குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 இதனை தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயுத தீர்வைத் துறை தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டார்.  அதில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் செயல்பட்டு வரும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார் .

Tap to resize

Latest Videos

பணியார்களுக்கு ஊதிய உயர்வு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6648 மேற்பார்வையாளர்கள் 14 ஆயிரத்து 794 விற்பனையாளர்கள் 2008 எழுவத்தி ஆறு உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 318 சில்லறை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பு எத்தனை மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாயும் விற்பனையாளர்களுக்கு 930 ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு 840 ரூபாயும் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மேலும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தொகுப்பு புதிய முறையில் பணியாற்றி வரும் மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் மற்றும்

புதைவிட கம்பிகள்

இதர அலுவலர்கள் பணியின் இருக்கும் போது மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நலநிதி மூன்று லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் அறிவித்தார். இதனை தொடர்ந்து எரிசக்தி துறையின் அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, அனல் மின் நிலையங்களின் செயல்திறன் மேம்படுத்துதல், தேரோடும் வீதிகளில் புதைவிட கம்பிகள் அமைத்தல், மின் பாதையில் ஏற்படும் பழுதுகளை கண்டறிவதற்கு ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட 31 புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

click me!