வடபழனி நிதி நிறுவனத்தில் கொள்ளை.. முகமூடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்.. வெளியான திடுக்கிடும் தகவல்

By Thanalakshmi V  |  First Published Aug 19, 2022, 12:16 PM IST

சென்னை வடபழனில் தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில், மேலும் இருவரை தனிப்படை போலீசார் வேலூரில் கைது செய்துள்ளனர்.
 


வடபழனியில் மன்னார் முதலி தெருவில் வசிக்கும் சரவணன் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கடந்த செவ்வாய்கிழமை 16 ஆம் தேதி, 7 பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பல் சரவணன் மற்றும் ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி, ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றது.

இந்த கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு 3 தினங்கள் முன்பு, அரும்பாக்கத்திலுள்ள வங்கியில் பட்ட பகலில், கொள்ளை கும்பல் ஊழியர் தாக்கி, 32 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது. சென்னையில் முக்கிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்களால், மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:தென்காசியில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு.. இன்று முதல் அமல்.. காரணம் என்ன தெரியுமா..?

இந்நிலையில் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய கும்பலை, அங்கு கூடியிருந்த பொதுமக்களின் உதவியுடன் விரட்டி பிடித்ததில் ஒருவன் சிக்கினான். மற்ற 6 பேரும் தப்பித்தனர்.  இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபழனி போலீசார், பொதுமக்கள் பிடித்த வைத்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஆழ்வார் திருநகரை சேந்த ரியாஸ் பாஷா என்பதும், கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 

பின்னர் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, இஸ்மாயில், ரியாஸ் பாஷா,கிஷோர், ஜானி, தமிழ், மொட்டை அகியோருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அதில் இருவர் கல்லூரி மாணவர்கள் ஆவர். இதனையடுத்து தப்பித்து சென்ற மற்றவர்களை பிடிக்க 6 தனிபடைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தனிபடை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் படிக்க:வேலியே பயிரை மேய்ந்தது போல்!! கொள்ளை வழக்கில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு.. பாய்ந்த நடவடிக்கை..

மேலும் 6 பேரின் வீடுகளில் சோதனை நடத்திய போலீசார் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சென்னையில் கிஷோர் கண்ணன் என்பவர் நேற்று கைதான நிலையில், மேலும் 2 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தமிழ்செல்வன், கிஷோர் கண்ணன், ரியாஸ் பாஷா ஆகியோர் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 லட்சத்தும் 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனிடையே நிதி நிறுவன கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.வேலூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள தினேஷ், சந்தோஷ் ஆகிய இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!