திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகள் காயத்ரி. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்தாம் ஆண்டு படிப்பாக ஹவுஸ் சர்ஜன் என்ற பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் தனது விடுதி அறையில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.காயத்ரி அறையின் கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் மற்றும் வார்டன் ஆகியோர் அறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க;- நடுரோட்டில் போதையில் தள்ளாடிய பள்ளி மாணவிகள்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தியதில் காயத்ரி மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதும், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், காயத்ரி அறையில் இருந்து போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. மின்சாரம் வாங்க தடை.. தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்..!