#BREAKING: இரட்டை இலை லஞ்சம் கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம்.. நாளை ஆஜராக இருந்த வக்கீல் தற்கொலை..!

By vinoth kumar  |  First Published Apr 6, 2022, 3:15 PM IST

அமமுக பொதுச்செயலர் தினகரன் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம், 2017ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் தற்போது சிறையில் இருந்து வருகிறார்.


இரட்டை இலை சின்னம் பெற முயன்ற வழக்கில் நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் வழக்கறிஞர் கோபிநாத் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லஞ்சம் கொடுத்த வழக்கு

Latest Videos

undefined

அமமுக பொதுச்செயலர் தினகரன் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம், 2017ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் தற்போது சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில்,  சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அப்படிப்படையில் தினகரன் தனக்கு முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக' கூறியுள்ளார். 

அமலாக்கத்துறை சம்மன்

இதனையடுத்து அமலாக்கத்துறையினர் வரும் 8ம் தேதி ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் அனுப்பினர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த  வழக்கறிஞர் கோபிநாத் (31) நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராக இருந்த நிலையில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

வழக்கறிஞர் தற்கொலை

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

click me!