குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது? உண்மையை போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதி..!

By vinoth kumar  |  First Published Feb 17, 2022, 5:27 AM IST

வாழ்நாள் முழுவதும் பெண்கள் வங்கியில் கையெழுத்திட்டு மாதந்தோறும் பணம் பெறும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து தரவிருக்கிறார். 


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்களுக்கு 4000 ரூபாய் உதவி தொகை வழங்கியது திமுக அரசுதான் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி;- தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்களுக்கு 4000 ரூபாய் உதவி தொகை வழங்கியது திமுக அரசுதான். 

Latest Videos

undefined

மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த வரும் பட்ஜெட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். வாழ்நாள் முழுவதும் பெண்கள் வங்கியில் கையெழுத்திட்டு மாதந்தோறும் பணம் பெறும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து தரவிருக்கிறார். 

மேலும் செங்குன்றம் பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறும்.  நாரவாரிக்குப்பம் பேரூராட்சி விரைவில் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

click me!