திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று ஒரு சிறுவன் செல்போனில் பேசிய படியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், சிறுவன் உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற சிறுவன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று ஒரு சிறுவன் செல்போனில் பேசிய படியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிறுவன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், சிறுவன் உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சிறுவன் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த கேசவன் என்பவரது மகன் தருண்(16) என தெரியவந்தது. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.