ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா ?

By Raghupati R  |  First Published Jul 15, 2022, 8:49 PM IST

ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அந்ததந்த மாவட்டத்தில் நடக்கும் உள்ளூர் திருவிழாக்களுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை விடுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆடித்தவசு திருவிழா நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பதால் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

மேலும் 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதனால் தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?

மேலும் அந்த தேதியில் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..நான் பணக்காரி இல்லை.. ஒன்றரை கோடி காரை மகனுக்கு பரிசாக கொடுத்த ரோஜா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

click me!