கணவனை பிரிந்து இருக்கும் மனைவி தாலி சங்கிலியை கழற்றுவதா.?? உயர் நீதிமன்றம் அதிருப்தி.. அதிரடி உத்தரவு.

By Ezhilarasan Babu  |  First Published Jul 15, 2022, 7:45 PM IST

கணவனை பிரிந்து வாழும் மனைவி தாலிச் சங்கிலியை கழற்றி வைப்பது என்பது கணவருக்கு மனரீதியாக அளிக்கும் டார்ச்சர் என்றும் அது சம்பிரதாய மற்ற செயல் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  கருத்து தெரிவித்துள்ளனர்.


கணவனை பிரிந்து வாழும் மனைவி தாலிச் சங்கிலியை கழற்றி வைப்பது என்பது கணவருக்கு மனரீதியாக அளிக்கும் டார்ச்சர் என்றும் அது சம்பிரதாய மற்ற செயல் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  கருத்து தெரிவித்துள்ளனர். மனைவியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் கணவன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கருத்து கூறியுள்ளனர்.

திருமண உறவு என்பது ஆயிரம் காலத்து பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறப்படுவது உண்டு. ஆனால் பல திருமணங்கள் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் பாதியிலேயே முறிந்து விடுகின்றன, ஒவ்வொரு பிரிவுக்கும் பல்வேறு வித காரணங்கள் சொல்லப்படுகிறது, இந்த வரிசையில் வேறொரு பெண்ணுடன் தன்னை தொடர்புபடுத்தி மனைவி தன்னை சந்தேகித்து துன்புறுத்தி வருவதால், மனைவியிடமிருந்து பேராசிரியர் ஒருவர் விவாகரத்து கேட்டுள்ளார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது, அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்டவாறு அதிரடியாக கருத்து கூறியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

முழு விவரம் பின்வருமாறு:- ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் சிவக்குமார் என்பவர் கடந்த 2016 ஆண்டு சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு  வழக்கு தொடர்ந்தார். அதில், அரசு ஆசிரியரான தனது மனைவி தன்னை வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு படுத்தி அவருடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி, தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், எனவே மனைவியுடன் தொடர்ந்து வாழ முடியாத நிலை இருப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து தர வேண்டும் எனக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதையும் படியுங்கள்: நான் பணக்காரி இல்லை.. ஒன்றரை கோடி காரை மகனுக்கு பரிசாக கொடுத்த ரோஜா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ஆனால் குடும்ப நல நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து குடும்ப நல நீதிமன்றம் தனக்கு விவாகரத்து வழங்க மறுத்து கொடுத்த உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் மேல் முறையீடு செய்தார், சிவக்குமார் அவர் தாக்கல் செய்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். நீதிபதிகள் வேலுமணி மற்றும் சௌந்தர் அமர்வு இந்த மனுவை விசாரித்ததுடன், கணவர் பணி செய்யும் இடத்திற்குச் சென்று கணவரைப் பற்றி அவதூறு  பரப்புவது மன ரீதியில் செய்யப்படும் துன்புறுத்தல் சமம் என தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது மேலும் கணவனை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழட்டி விட்டதாக மனைவி கூறியது கூட ஒருவகையில் கணவரை மன ரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் எனக் கூறியதுடன், கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் கருத்து தெரிவித்த அவர்கள், தாலி என்பது கணவர் உயிருள்ளவரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில், அவரைப் பிரிந்ததும் தாலி சங்கிலியை மனைவி கழற்றியது சம்பிரதாயமற்றச் செயல் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: அதிமுக அலுவலக சீலை அகற்றக்கோரிய வழக்கு... தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!!

click me!