புதிதாக கட்டப்பட்டு வந்த கான்கிரீட் பாலம் இடிந்து விழுந்து விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலாளர்கள்.!

By vinoth kumarFirst Published Oct 8, 2023, 12:30 PM IST
Highlights

போக்குவரத்திற்கு பாலம் மிகவும் குருகளாக இருந்ததன் காரணமாகவும் பொதுப்பணித்துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

புதிதாக கட்டப்பட்டு வந்த கான்கிரீட் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

விருதுநகர் மாவட்டம் அருகே  கூமாபட்டி  பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே தரைப்பாலம்  இருந்தது. அந்த பாலமானது சேதமடைந்த காரணத்தினாலும், பாலத்திற்கு அடியில் செல்லக்கூடிய கழிவுநீர் தேங்கி நின்றது. மேலும் போக்குவரத்திற்கு பாலம் மிகவும் குருகளாக இருந்ததன் காரணமாகவும் பொதுப்பணித்துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதையும் படிங்க;- இதெல்லாம் அனுமதிக்கவே முடியாது.. சமுதாயத்தை திருத்த வேண்டிய நீங்களே இப்படி சீரழிவை உருவாக்கலாமா? பாஜக கண்டனம்!

இதனையடுத்து புதிய பாலம் அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் தனியார் ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்நிலையில் புதிதாக  பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு துவங்கிய நிலையில் இன்று பாலத்திற்கு கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்றுள்ளது. தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக  பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இதையும் படிங்க;-  பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து.. பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு! தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

இதில் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் உயிர்தப்பினர். அவசர கோலத்தில் பணி நடைபெற்று வருவதே இந்த விபத்திற்கு காரணம் எனவும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!