அண்ணாமலை நடை பயணத்திற்கு டஃப் கொடுக்கும் மா. சுப்ரமணியன்; இது என்னது புதுசா இருக்கு; நம்ம லிட்ஸ்லையே இல்லையே!

By Velmurugan sFirst Published Aug 14, 2023, 3:40 PM IST
Highlights

"நடப்போம் நலம் பெறுவோம்" எனும் நோக்கத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது மக்கள் 8 கிமீ தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி செய்ய தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

நடப்போம், நலம் பெறுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். நடப்போம் நலம் பெறுவோம்' என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்படும். நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில்  உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை உருவாக்கப்படும்.

மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சுகாதார பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடைபயிற்சியின் முடிவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்திருந்தார்.

தனியார் பள்ளியில் காலை பிரேயரில் மயங்கி விழுந்த மாணவி; சோகத்தின் உச்சத்தில் மாணவர்கள்

அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது மக்கள் 8 கிமீ தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி செய்ய மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மருத்துவப் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நடந்து சென்று ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச  பெருமாள்   நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பொது மக்கள் 8 கிமீ தூரம் உடன் பங்கேற்றனர்.

திம்பம்  மலைப்பாதையில் சாலையின் குறுக்கே ஓடி விளையாடும் சிறுத்தை

click me!