ஆடி அமாவாசை 2024: சதுரகிரி மலைக்கு இந்த தேதி வரை மட்டுமே செல்ல முடியும்..

By Ramya s  |  First Published Aug 1, 2024, 10:12 AM IST

இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது


தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவன் மலையேற்ற தளங்களில் ஒன்றாக சதுரகிரி மலை உள்ளது. இந்த மலை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சித்தர்களின் பூமி என்று அழைக்கப்படும் சதுரகிரி மலைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காட்சி தருகின்றனர். 

அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் சதுரகிரி மலையில் சிவபெருமான் 5 வகை லிங்கங்களில் காட்சி தருகிறார். 
எனினும் இந்த மலைக்கு எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியாது. பாதுகாப்பு கருதி அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. 
இதனால் எப்போதுமே சதுரகிரி மலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் அங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

ஆடி அமாவாசை 2024 எப்போது? இந்த 1 எளிய தானம் செய்ங்க.. இனி அதிஷ்டம் தான்!

அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 04-ம் தேதி வருகிறது. அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த ஆண்டு சதுரகிரி மலைக்கு அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி அமாவாசைக்கு சதுரகிரி செல்ல 10 நாட்கள் அனுமதி வழங்கப்படும். ஆனால் பாதுகாப்பு கருதி கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆடி அமாவாசைக்கு 10 நாட்கள் அனுமதி வழங்கப்படவில்லை. மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. 

ஆகஸ்ட் 2024 : முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள், சுப முகூர்த்தங்கள்.. முழு விவரம் இதோ

அந்த வகையில் கடந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு 6 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 
இந்த நிலையில் இந்த ஆண்டு 5 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 5 நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மழைப்பொழிவு இருந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

click me!