சிவகாசியில் நடந்தது ஆணவக் கொலை அல்ல.. அப்படினா? மாவட்ட எஸ்.பி. பரபரப்பு தகவல்!

By vinoth kumar  |  First Published Jul 25, 2024, 3:34 PM IST

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் பாண்டியனை வெட்டி கொலை செய்தனர். 


சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கார்த்திக் பாண்டி கொலை ஆணவக் கொலை இல்லை என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த கார்த்திக் பாண்டி (27) என்பவர் அதே பகுதியை சேர்ந்த நந்தினி(22) என்பவரை காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நந்தினி குமாரியின் அண்ணன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டு அய்யம்பட்டியில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் மனைவி நந்தினியை அழைத்து செல்ல கார்த்திக் பாண்டி வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்து தனபாலமுருகன், பாலமுருகன், அவரது உறவினர் சிவா ஆகியோர் சேர்ந்து கார்த்திக் பாண்டியை ஆணவக்கொலை செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை விருதுநகர் மாவட்ட எஸ்.பி. திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

Latest Videos

இதையும் படிங்க: ஏண்டா உன் மூஞ்சிக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா! தங்கை தாலி அறுத்தாலும் பரவாயில்லை! காதலன் ஆணவக்கொலை!

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில்: விருதுநகர் மாவட்டம் அய்யம்பட்டி கிராமம் மாரி முத்து என்பவரின் மகன் கார்த்திக் பாண்டியன் (27) என்பவரும் மகாத்மா காந்தி நகரில் வசித்து வரும் பொன்னையா என்பவரின் மகள் நந்தினி (22) என்பவரும் காதல் திருமணம் செய்து அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க:  ஆந்திராவில் காதலி வீட்டில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா! சேசிங் செய்த போது எஸ்கேப்! தப்பிக்க உதவிய போலீஸ்?

இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் பாண்டியனை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.  இந்த கொலை சம்பவத்தை ஆணவக்கொலை என்று தவறாக சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.  இது ஆணவக்கொலை அல்ல. இறந்தவரும் அவர் காதல் திருமணம் செய்த பெண்ணும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் சமீபத்தில் அவர்களது மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவரின் சகோதரர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. 

click me!