மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் ரயில் முன் படுத்து தற்கொலை; போலீசார் விசாரணை

Published : Dec 20, 2023, 03:46 PM IST
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் ரயில் முன் படுத்து தற்கொலை; போலீசார் விசாரணை

சுருக்கம்

ஜோலார்பேட்டை அருகே மனவைி பிரிந்து சென்றதால் மனஉளைச்சலில் இருந்த வாலிபர் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த சீனு என்பவரது மகன் திருப்பதி (வயது 29)  இவருக்கு திருமணம் ஆகி திவ்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திவ்யா அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில்  திருப்பதி தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி நேற்று இரவு முதல் காணாமல் போணார். அதனை தொடர்ந்து இன்று பாச்சல் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில்  ரயிலில் அடிப்பட்டு ஆண் சடலம் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 

25 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் மன உழைச்சலில் சுற்றி திரிந்த திருப்பதி என்பது தெரிய வந்தது. பின்னர் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!