அண்ணனை பள்ளிக்கு வழியனுப்பச் சென்ற ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி பலி

By Velmurugan s  |  First Published Dec 14, 2023, 10:59 PM IST

திருப்பத்தூரில் அண்ணனை வழியனுப்பச் சென்ற ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரனின் மகன் பிரித்திவி (வயது 3).  விஷமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளி வாகனம் பிருதிவியை அழைத்துச் செல்ல வீட்டின் அருகாமையில் வந்துள்ளது. அப்போது பிரித்திவியின் தந்தை ராஜசேகரன் பள்ளி வாகனத்தில் குழந்தையை ஏற்றிவிட்டு சென்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Tap to resize

Latest Videos

undefined

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது பள்ளி வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை இயக்க முற்படும்போது எதிர்பாராத விதமாக ராஜசேகர் இரண்டாவது மகன் ஒன்றரை வயது புனிதன் திடீரென ஓடிவந்து பள்ளியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். பின்னர் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு

மருத்துவமனை முன்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலகச் செய்தது. மேலும் உயிரிழந்த குழந்தையின் தாத்தா முருகன் தனது பேரனை பள்ளி வாகனத்தை ஏத்தி கொன்றுவிட்டதாக மருத்துவமனையின் முன்பு கதறி அழுதார். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் பள்ளி வாகன ஓட்டுனரான முனியப்பனை கைது செய்தனர். பள்ளி வாகனத்தில் சிக்கி ஒன்றை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!