திருப்பத்தூரில் பைக் ஓட்டிச்சென்ற 9ம் வகுப்பு மாணவன் பள்ளி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி

Published : Dec 06, 2023, 12:31 PM IST
திருப்பத்தூரில் பைக் ஓட்டிச்சென்ற 9ம் வகுப்பு மாணவன் பள்ளி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி

சுருக்கம்

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற 9ம் வகுப்பு மாணவன் பள்ளிப்பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் திவாகர் (வயது 14). தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்தார். இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்க சக்தி நகர் பகுதியில் உள்ள சந்தைக்கு செல்ல தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் அஜய் என்பவருடன் புதுப்பேட்டை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் தனியார் பேருந்து திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டை சாலை வழியாக சென்றது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேர் எதிரே வந்த  திவாகர் மற்றும் அஜய் வந்த இருசக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் திவாகர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் அஜய் உயிர் தப்பினார். இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் பள்ளி பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார். பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு வேறு ஒரு பேருந்து வரவழைக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் அங்கிருந்து பள்ளிக்குச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்தினா் அதன் அடிப்படையில் விரைந்து வந்த  போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவைத்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திவாகர் உயிரிழந்த நிலையில் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க செய்தது.

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!